உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தேவாலா சாலையோரம் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

 தேவாலா சாலையோரம் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

பந்தலூர்: பந்தலூர் அருகே, தேவாலா சாலையோரம், ஆபத்தை ஏற்படுத்தும் கால்வாய் அருகே எச்சரிக்கை அறிவிப்பு வைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. பந்தலூரில் இருந்து கூடலூர் மற்றும் ஊட்டி, கேரளா மாநிலம் செல்லும், நெடுஞ்சாலை தேவாலா வழியாக செல்கிறது. இந்தப் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலை ஓரம், கால்வாய் மற்றும் சிறிய தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. தடுப்பை ஒட்டி கால்வாய் உடைந்து, சாலையோரம் ஆபத்தை ஏற்படுத்த வகையில் உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் மற்றும் மேகமூட்டமான நேரங்களில் வரும் வாகனங்கள், நிலைத்தடுமாறி கால்வாயில் விழுந்தால் பாதிப்புகள் ஏற்படும். எனவே, இந்தப் பகுதியில் தடுப்பு அமைக்கவும், பாதிப்பு குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு தெரியும் வகையில், எச்சரிக்கை அறிவிப்பு வைக்கவும் வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை