உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடைபாதை அருகே பள்ளம்

நடைபாதை அருகே பள்ளம்

கூடலுார்; கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, சீரமைக்கப்பட்ட நடைபாதையை ஒட்டிய பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சேதமடைந்த நடைபாதையை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் நிதி, 38 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து குறிப்பிட்ட துாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. இடையில், 100 மீட்டர் துாரம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், சீரமைக்கப்பட்ட நடைபாதை ஓரத்தில், மூடப்படாத பள்ளத்தில் நடைபாதையில் நடந்து செல்பவர்கள் தவறி விழும் ஆபத்து உள்ளது. எனவே, பள்ளத்தை மூடுவதுடன், நடைபாதை ஓரம் ஏற்கனவே அகற்றப்பட்ட இரும்பு தடுப்புகளை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை