உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொது தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பரிசளிப்பு

பொது தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பரிசளிப்பு

பந்தலுார் : பந்தலுார் அருகே உப்பட்டியில் செயல்படும், மாவட்ட டாக்டர் அப்துல் கலாம் அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில், 10ம் வகுப்பில் சாதித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் வரவேற்றார். அறக்கட்டளை நிர்வாகி சூசைராஜ் தலைமை வகித்தார்.தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், மாணவர்கள் சாதிக்க தேவையான அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, புனித சேவியர் பள்ளி மாணவி தனுஸ்ரீ, உப்பட்டி எம்.எஸ்.எஸ். பள்ளி மாணவி ஹரிதா, டியூஸ் பள்ளி மாணவி லிவின்யா ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து, பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுபா, ஆங்கில பயிற்சியாளர் ரஞ்சன் விக்னேஷ், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலை துறை பணியாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுந்தர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ