உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

அரசு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

பந்தலுார : வங்கி பேரவை பிரதிநிதி வக்கீல் கணேசன் கூறியதாவது: தாயகம் திரும்பிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், 11 மற்றும் 12ம் வகுப்புகளில், 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும்; பத்தாம் வகுப்பில், 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும்; அரசு உதவி பெறும் பள்ளிகளில், 80 சதவீதத்திற்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றிருந்தால், வங்கி சார்பில் ஊக்க பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சான்றோப்பமிட்ட மதிப்பெண் பட்டியல்; குடும்ப அட்டை நகல்; ஆதார் அட்டை நகல்; பெற்றோரின் வங்கி, 'அ'வகுப்பு உறுப்பினர் அடையாள அட்டை நகல்; மாணவர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மாணவர் அல்லது பெற்றோரின் ரேப்கோ வங்கி அல்லது தேசிய வங்கிசேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். சந்தேகங்கள் இருந்தால், 9442443361 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ