கால்வாய் அமைக்க தோண்டிய குழியை சீரமைக்காததால் சிக்கல்
குன்னுார்; குன்னுார் நகராட்சி, உமரி காட்டேஜ் பகுதியில், கழிவு நீர் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழி, ஒரு மாதமாகியும் மூடப்படாமல் உள்ளது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 12வது வார்டு உமரி காட்டேஜ் மற்றும் 'ஆப்பிள் பி' செல்லும் முக்கிய சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கழிவு நீர் கால்வாய் சீரமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளன.இவ்வழியாக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. பதிக்கப்பட்ட 'இன்டர்லாக்' கற்கள் வீணடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மக்கள் கூறுகையில்,'நகராட்சி துணை தலைவராக உள்ள இந்த வார்டு கவுன்சிலர், கழிவுநீர் கால்வாய் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரத்தில் இவ்வழியாக வருபவர்கள், குழியில் விழுந்து, காயம் ஏற்படும் அபாயம் உள்ளது,' என்றனர்.