உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள செடிகளால் சிக்கல்

போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள செடிகளால் சிக்கல்

கூடலுார் : கூடலுார் கோழிக்கோடு சாலையோரம், வளர்ந்துள்ள முட்புதர்களால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கூடலுார்- கோழிக்கோடு சாலை பல இடங்களில் சேதமடைந்து, வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. இச்சாலையில், செம்பாலா முதல் நாடுகாணி வரை, சாலையோரங்களில் வளர்ந்துள்ள செடிகள் முட்புதர்கள் போன்று காணப்படுகிறது. மக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றாததால் மக்கள், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'கோழிக்கோடு சாலையோரம் வளர்ந்துள்ள, செடிகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவை தற்போது முட்புதர்கள் போன்று மாறி உள்ளது. சாலையோர மக்கள் நடந்து செல்லவும் வாகனங்கள் இயக்கவும் சிரமமாக உள்ளது. விபத்து அபாயமும் உள்ளது. மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோர முற்புதர்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை