உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சொத்து வரி உயர்வு: அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்

சொத்து வரி உயர்வு: அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்

ஊட்டி : சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில், மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.ஊட்டி கமர்சியல் சாலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார். நகர செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். அதில், 'தி.மு.க. ஆட்சியில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், இதுவரை இல்லாத வகையில், ஆண்டுதோறும், 6 சதவீத சொத்து வரி உயர்வு என்ற பேரிடி மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது,' என, குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் எம்.பி., அர்ஜூணன், மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பாசறை செயலாளர் அக்கிம்பாபு உட்பட பலர் பங்கேற்றனர். * குன்னுாரில் அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சத்தார் தலைமையிலும், அருவங்காடு பகுதியில் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜூ தலைமையிலும் போராட்டம் நடந்தது.*கோத்தகிரியில், பேரூராட்சி செயலாளர் நஞ்சு சுப்பிரமணி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு போராட்டத்துக்கான காரணம் குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ