உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகரில் ஒளிராத தெருவிளக்கு இரவில் பொது மக்கள் அதிருப்தி

நகரில் ஒளிராத தெருவிளக்கு இரவில் பொது மக்கள் அதிருப்தி

கூடலுார்:கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பராமரிப்பின்றி பல தெரு விளக்குகள் ஒளிராததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலுார் நகராட்சி சார்பில் நகரப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்துள்ளனர். முக்கிய இடங்களில் கோபுரமும் அமைத்து 'ஐமாஸ் லைட்' அமைத்துள்ளனர். இந்நிலையில், கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கடந்த சில வாரங்களாக ஐமாஸ் லைட் மற்றும் பல தெருவிளக்குகள் எரிவதில்லை. அப்பகுதியில் கடைகளில் உள்ள விளக்குகள் மட்டுமே, இருளை போக்கி வருகின்றன. கடைகள் அடைக்கப்பட்ட பின், அப்பகுதி போதிய வெளிச்சம் இன்றி காணப்படுவதால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தெரு விளக்குகளை முறையாக பராமரித்து ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை