உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியின கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் உறுதி

பழங்குடியின கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் உறுதி

பந்தலுார் : பந்தலுார் அருகே வெள்ளாரங்குன்னு பழங்குடியின கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளாரங்குன்னு பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. 12 குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் இங்கு குடி இருந்து வரும் நிலையில், குடியிருப்புகள் சேதமடைந்து, இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. மேலும், கழிப்பிடவசதி, நடைபாதை, குடிநீர், தெருவிளக்கு என எந்த வசதிகளும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இது குறித்து, நமது நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் பழங்குடியின கிராமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 'பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும்; இதற்கான ஆய்வு சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு விரைவில் பணிகள் துவக்கப்படும்,' என, அதிகாரிகள்உறுதி அளித்தனர். இதனால், பழங்குடியினமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை