மேலும் செய்திகள்
கொள்முதல் நிலையங்களில் பசுந்தேயிலை வரத்து உயர்வு
20-Jun-2025
பந்தலுார்; பந்தலுார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தேயிலைகளில் கொப்புள நோய் பரவி, விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பந்தலுார் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை மற்றும் காபி விவசாயத்தில் அதிக அளவிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் பசுந்தேயிலை வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில், அவ்வப்போது மழை மற்றும் வெயிலான காலநிலையால் தேயிலை வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தற்போது தொடர் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக, பசுந்தேயிலையில் கொப்புள நோய் பரவி வருகிறது. இதனால், இலை வரத்து குறைந்து தேயிலை விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தேயிலை வாரிய அதிகாரிகள் கொப்புள நோய் பாதிப்பை கட்டுப்படுத்த, மானிய விலையில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20-Jun-2025