உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் தொடரும் மழை; குறையும் சுற்றுலா பயணிகள்

நீலகிரியில் தொடரும் மழை; குறையும் சுற்றுலா பயணிகள்

கோத்தகிரி; நீலகிரியில், 'ரெட் அலெர்ட்' எதிரொலியாக முக்கியமான சுற்றுலா மையங்களில், பார்வையாளர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், சீசன் நாட்கள் உட்பட, வார இறுதி நாட்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். நடப்பாண்டில் கன மழை பெய்ததால், மே மாதம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்தது. சற்று மழை ஓய்ந்தபின், கடந்த வாரம் பார்வையாளர்களின் வருகை உயர்ந்தது. இந்நிலையில், மாவட்டத்தில், இரு நாட்கள் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடலுார், குந்தா மற்றும் ஊட்டி வட்டங்களில், காற்றுடன் மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.இந்நிலையில், கோத்தகிரி பகுதியில், சாரல் மழையுடன் பலத்த காற்று வீசுகிறது. கோடநாடு காட்சி முனை மற்றும் கேத்ரீன் நீர்வீழ்ச்சி பகுதிகளில், கடும் குளிரான காலநிலை நிலவியதால், குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி