உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பைக்கில் கட்டுவிரியன் பாம்பு: அலர்ட் செய்த மக்கள்

பைக்கில் கட்டுவிரியன் பாம்பு: அலர்ட் செய்த மக்கள்

கூடலுார்; கூடலுாரில், பைக்கில் பயணித்தவரின், பின் சீட்டில் இருந்த பாம்பை பார்த்து, மக்கள் சப்தமிட்டு பைக்கை நிறுத்தினர். கூடலுாரை சேர்ந்தவர் ராஜ், 40. இவர் மைசூரு தேசிய நெடுஞ்சாலை, பால் சொசைட்டி அருகே, நிறுத்திய பைக்கை நேற்று மதியம், 2:30 மணிக்கு ஓட்டியவாறு கூடலுார் நோக்கி வந்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வரும்போது, பைக்கின் பின் சீட்டில், பாம்பு இருப்பதை சிலர் பார்த்து சப்தமிட்டனர். அதிர்ச்சியடைந்த ராஜூ பைக்கை நிறுத்தி கீழே குதித்து உயிர் தப்பினார். பாம்பு பைக் உள்ளே சென்று மறைந்தது. கூடலுார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, டார்ச் லைட் வெளிச்சத்துடன் பாம்பை தேடினர், கிடைக்கவில்லை. தொடர்ந்து, அப்பகுதி இளைஞர் ஒருவர் உதவியுடன், பைக் சீட்டை அகற்றி, பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு மிகவும் ஆபத்தான கட்டுவிரியன் என்பதை அறிந்து ராஜ் அதிர்ச்சி அடைந்தார். ராஜ் கூறுகையில், ''பைக்கை ஸ்டார்ட் செய்து, புறப்பட்டபோது பாம்பு இருப்பது தெரியவில்லை. பைக் ஓட்டி கொண்டிருக்கும்போது, பின் சீட்டில், பாம்பு இருந்ததை சிலர் பார்த்து, சப்தமிட்டதால், பைக்கை நிறுத்தி, குதித்து, பாம்பிடமிருந்து தப்பினேன். மக்களுக்கு நன்றி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை