உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் வறண்டு வரும் ரேலியா அணை; நகருக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல்

குன்னுாரில் வறண்டு வரும் ரேலியா அணை; நகருக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல்

குன்னுார்: குன்னுாரில் நீராதார பகுதிகளில் மழை இல்லாததால், ரேலியா அணை வறண்டு வருவதால், நகருக்கான குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும், 43.6 அடி உயரமுள்ள ரேலியா அணையில் இருந்து, நகர பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது அணையில் சேறு, சகதியுடன், 15 அடிகள் வரை தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் சில பகுதிகள் வறண்டு தரை பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், நகரில் பல வார்டுகளில், 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நீராதார பகுதிகளில் மழையின் தாக்கம் குறைவு காரணமாக அணையின் நீர்மட்டம் உயரவில்லை. மழை பெய்யாத நிலையில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போல, அணையின் நீர்மட்டம் 'ஜீரோ பாயின்டை' எட்டும் அபாயம் உள்ளது. குன்னுார் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி கூறுகையில்,''கடந்த வாரம் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் வினியோகம் பாதித்தது. ரேலியா அணையில் இருந்து அதிகளவில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அதனால், நீர்மட்டம் குறைந்தது. மழை இல்லாததால் அணை நிரம்பவில்லை. எனினும், 23 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது. தற்போது, எமரால்டு குடிநீர் திட்ட வினியோகம் சீரானது. வரும் நாட்களில் மழை பெய்யும் நிலை உள்ளதால் சப்ளை சரியாகிவிடும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை