உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போக்குவரத்துக்கு இடையூறு :சாலையோர பாறாங்கற்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

போக்குவரத்துக்கு இடையூறு :சாலையோர பாறாங்கற்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

ஊட்டி: தினமலர் செய்தி எதிரொலியாக சாலையோரத்தில் இருந்த பாறாங்கற்கள் 'பொக்லைன்' உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். ஊட்டியிலிருந்து ஆடாசோலை, தேனாடுகம்பை வழியாக அணிக்கொரை, கடநாடு, பெந்தட்டி, சின்னகுன்னுார், தொரைஹட்டி, கெங்கமுடி, துானேரி, கொதுமுடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு பஸ், தனியார் வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகிறது. தவிர, இப்பகுதியை சுற்றி மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டிருப்பதால் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் செல்கிறது. குறுகலான இச்சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. விரிவாக்கத்தின் போது, சாலையில் பெரிய அளவிலான பாறாங்கற்கள் விழுந்தது. விழுந்த பாறாங்கற்களை நெடுஞ்சாலைத்துறையினர் உடைத்து அகற்றாமல் ஆங்காங்கே சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளனர். இச்சாலையில் வாகனங்கள் சென்று வர பெரும் இடையூறால் வாகன ஓட்டிகள் திணறுவதாக நேற்று 27ம் தேதி தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைதுறை ஊழியர்கள் 'பொக்லைன்' உதவியுடன் பாறாங்கற்களை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ