உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி மாணவர்கள் நலன் கருதி பஸ் இயக்க கோரிக்கை

பள்ளி மாணவர்கள் நலன் கருதி பஸ் இயக்க கோரிக்கை

ஊட்டி; தூனேரி அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் நலன் கருதி, குறித்த நேரத்தில் பஸ் இயக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு:ஊட்டி தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 400 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இடு ஹட்டி, பெரியார் நகர், திருச்சிகடி , கெந்தொரை மற்றும் தொட்டண்ணி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.ஊட்டியில் இருந்து பள்ளிக்கு வர அரசு பஸ்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்காததால், பெரும்பாலான பெற்றோர் தனியார் வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நிலை உள்ளது.பொருளாதார சிக்கல் அதிகமாக உள்ளதால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதுடன், இடை நிற்றல் அதிகரிக்கும் நிலை உள்ளது. குறித்த நேரத்தில் பஸ் இயக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை