உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானையால் குடியிருப்பு சேதம்

யானையால் குடியிருப்பு சேதம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானை வீட்டு சமையல் அறையை சேதப்படுத்தியது. பந்தலுார் அருகே, 10 லைன் டான் டீ குடியிருப்பு பகுதியில், 8-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் நள்ளிரவு குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அதில், பஞ்சவர்ணம் என்பவரது வீட்டு சமையல் அறையை ஒரு யானை இடித்து சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து, வனத்துறையினர் முகாமிட்டு, யானை கூட்டத்தை சாமியார் மலைப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். டான் டீ நிர்வாகம் சார்பில், இடிந்த சமையல் அறையை சீரமைத்து தர வலியுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை