உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை நீரால் மண்ணரிப்பு சாலை சேதமடையும் அபாயம்

மழை நீரால் மண்ணரிப்பு சாலை சேதமடையும் அபாயம்

கூடலுார்; கூடலுார்- ஊட்டி சாலை சில்வர் கிளவுட் அருகே, சாலையோரம் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பால் சாலை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கூடலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த வாரம் துவங்கிய பருவமழை இடைவெளி இன்றி பெய்து வருகிறது.கூடலுார் முக்கிய சாலையோரங்களில் மழை நீர் கால்வாயில் இன்றி, மழைநீர் சாலையில் வழிந்தோடி வருவதால், சாலையோரங்கள் சேதமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சில்வர் கிளவுட் அருகே, சாலையோரம் வழிந்தோடும் மழை நீரால், சிறு பாலத்தை ஒட்டிய பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலை சேதமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஓட்டுனர்கள் கூறுகையில், 'சாலையோரங்களில் மழை நீர் வழிந்து ஓட சரியான கால்வாய் வசதி இல்லாததால், இதுபோன்று சாலையோரங்களில் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க சாலையோரங்களில் மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை