உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண் அரிப்பால் சாலை; சேதமடையும் அபாயம்

மண் அரிப்பால் சாலை; சேதமடையும் அபாயம்

கூடலுார்; கூடலுார் நாடுகாணி அருகே, சாலையோர ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக சாலை சேதம டையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கூடலுார் நாடுகாணி நகரில் சாலையோரம் விபத்தை தடுக்க, நெடுஞ்சாலை துறை மூலம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை ஒட்டி நாடுகாணி நீரோடை செல்கிறது. அப்பகுதியில் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர். இந்த குப்பை ஆற்றின் கரையோரம் குவிந்துள்ளது. இரவில் அங்கு உணவு தேடி வரும், காட்டு பன்றிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு, இரும்பு தடுப்பு உறுதி தன்மையின்றி உள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில், சாலை சேதமடைவதுடன், ஆற்று நீர் மாசுபடும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க வலியுறுத்தி உள்ளனர்.மக்கள் கூறுகையில், 'நெடுஞ்சாலை துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்து மண் அரிப்பு ஏற்பட்டுள்ள, சாலையோரம் தடுப்பு சுவர் அமைப்புடன், ஆற்றின் கரையில் குவிந்துள்ள குப்பை அகற்ற வேண்டும். மேலும், அப்பகுதியில் குப்பைகொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி