உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரம் பள்ளம்: வாகன விபத்து அபாயம்

சாலையோரம் பள்ளம்: வாகன விபத்து அபாயம்

கூடலுார் : கூடலுார் தேவர்சோலை சாலை, பாடந்துறை தனியார் பள்ளி அருகே, ஆரவயல் கிராமத்துக்கு நடைபாதை பிரிந்து செல்கிறது. அப்பகுதியில், தரையில் இருந்து சாலை ஒன்றரை அடி உயரத்தில் உள்ளது.அப்பகுதியில், சாலையோரம் தாழ்வான பள்ளமாக உள்ளது. பாடந்துறையிலிருந்து தேவர்சோலை நோக்கி செல்லும் வாகனங்கள், அப்பகுதியில் கடக்கும் போது சற்று கவன க்குறைவு ஏற்பட்டாலும், விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இதனை, தடுக்க சிலர் சாலையோரம் கற்கள் வைத்துள்ளனர். எனினும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.எனவே, அப்பகுதியை நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, விபத்துகளை தடுக்கும் வகையில் தடுப்புச் சுவர் அல்லது பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ