உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ‘பசுந்தேயிலைக்கு ரூ. 19.91 விலை நிர்ணயம்’

‘பசுந்தேயிலைக்கு ரூ. 19.91 விலை நிர்ணயம்’

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் செப்., மாதத்திற்கான, பசுந்தேயிலை விலை கிலோவிற்கு, 19.91 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் தேயிலை மையம் மற்றும் இன்கோசர்வ் மையத்தில், ஏலம் விடப்படும், தேயிலை தூள், விலையின் அடிப்படையில், மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு தேயிலை வாரிய கமிட்டி சார்பில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, செப்., மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோ, 19.91 ரூபாய் என, குன்னூரில் உள்ள தேயிலை வாரியம் விலை நிர்ணயம் செய்துள்ளது. தேயிலை வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார் கூறுகையில் அந்தந்த மாத ஏலத்தின் அடிப்படையில் அதே மாத விலையை, அனைத்து தொழிற்சாலைகளும் வழங்க வேண்டும்; தேயிலை வாரிய கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை மேம்பாட்டு உதவி இயக்குனர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர். என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை