உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ. 3 கோடியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்

ரூ. 3 கோடியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்

பந்தலுார்: பந்தலுார் அருகே குந்தலாடி பகவதி அம்மன் கோவிலில் இருந்து, தானிமூலா வழியாக சேலக்குன்னா மற்றும் நெல்லியாளம், வாழவயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.இந்த சாலை தார் சாலையாக சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் சென்று வர முடியாத நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும், இந்த பகுதியில் இரவு, 7:00 மணிக்கு மேல் யானை மற்றும் சிறுத்தை முகாமிடும் நிலையில், ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்களும் இரவில் இந்த வழியாக வராதததால், மக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. இந்த சாலை பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் டெர்மிளா பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் சற்குணசீலன், ஜோஸ்குட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை