உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 30 கோடி நலத்திட்ட உதவிகள்

4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 30 கோடி நலத்திட்ட உதவிகள்

ஊட்டி; நீலகிரியில், 4,712 மாற்று திறனாளிகளுக்கு 30.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு மாற்று திறனாளிகளை அடையாளம் கண்டு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி, கண்ணொளி வழங்கும் திட்டம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், மாத ஓய்வூதிய திட்டம், பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித் தொகை, அரசு பஸ்சில் இலவச பயண சலுகை, கல்லுாரிகளில் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாற்று திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 30 கோடியில் நலத்திட்ட உதவிகள்

மாவட்டத்தில், 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை மாவட்ட மாற்று திறனாளிகள் நல துறையின் சார்பில , 2,892 மாற்று திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவி தொகையாக, 26.65 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.973 மாற்று திறனாளிகளுக்கு, 1.62 கோடி ரூபாய் மதிப்பில், 'ஸ்கூட்டர்கள், பேட்டரி வீல் சேர்கள், தையல் இயந்திரங்கள், திறன்பேசிகள், சக்கர நாற்காலிகள் ஊன்று கோல்கள், பிரெய்லி வாட்ச்கள், காதொலி கருவிகள்,' போன்ற உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. 20.42 லட்சம் ரூபாயில், 432 மாற்று திறனாளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 57 மாற்று திறனாளி பயனாளிகளுக்கு சுய தொழில் புரிய வங்கி கடன் மானியமாக, 11.94 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு திட்டத்தின் கீழ் மாவட்ட முழுவதும், 4,712 பயனாளிகளுக்கு, 30.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்று திறனாளிகள் நலத்துறை வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை