உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பதன்கோடு நீர் தேக்க பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம்

பதன்கோடு நீர் தேக்க பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம்

ஊட்டி : 'ஊட்டி அருகே, பதன்கோடு மந்து நீர் தேக்கத்தில் குடிநீர் மாசடைவதை தடுக்க வேண்டும்,' என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஊட்டி அருகே, சோலுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். கிராமங்களுக்கு, பதன்கோடு மந்து பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரம் வாயிலாக கொண்டுவரப்படும் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வனத்தை ஒட்டி இந்த நீர் தேக்கம் பகுதி உள்ளது. அப்பகுதிகளில் எருமைகள் கூட்டமாக நீர் தேக்கத்தில் நீந்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.தற்போது, தென் மேற்கு பருவமழையால் நீர் தேக்கத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அங்கு எருமைகள் நீந்தி செல்வதால் குடிநீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நீர் தேக்க பகுதியில் ஆங்காங்கே வளர்ந்துள்ள புதரால் தண்ணீர் சேமிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 'நீர் தேக்க பகுதியில் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி, குடிநீர் மாசடைவதை தடுக்க வேண்டும்,' என, கிராம மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தனர். பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், மக்களுக்கான குடிநீர் மாசடைந்து வருகிறது. மக்கள் கூறுகையில்,'இந்த பிரச்னை குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், 15 வார்டுகளுக்கான குடிநீர் ஆதாரத்தை ஆய்வு மேற்கொண்டு நீர் தேக்கப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ