உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்; சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமில் அறிவுரை

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்; சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமில் அறிவுரை

பந்தலுார்; 'பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள, தயக்கமின்றி முன் வர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. பந்தலுார் தாசில்தார் அலுவலகத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான, 'பாவை' எனும் தலைப்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சமூக நலத்துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பணியாளர் ஷாலினி வரவேற்றார். நீதிபதி பிரபாகரன் தலைமை வகித்து பேசுகையில், ''அனைத்து துறைகளிலும் அதிக திறமையுடன் பணியாற்றும் பெண்களுக்கு, பல்வேறு வகையிலும் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள, பொது இடங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அது குறித்து சட்ட பணிகள் ஆணை குழு பணியாளர்களிடம் கூறினால், உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதிப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏதுவாக அமையும். எனவே தயக்கமின்றி தங்களுக்கான பாதிப்புகளை கூறவும், தங்கள் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தி அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்த பெண்கள் முன் வர வேண்டும். 10 பெண்களுக்கு மேல் பணியாற்றினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது,''என்றார். தாசில்தார் சிராஜூநிஷா பேசுகையில், ''அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம். அதே போல் பல்வேறு பிரச்னைகளுக்கும் உள்ளாக்கப்படும் நிலையில், தொடர்ந்து பாதிக்கப்படும் பெண்களுக்கும், சமூகத்தில் உள்ள பெண்களுக்கும் பாதிப்பு தொடராமல் தடுக்கும் வகையில், பாதிக்கப்படும் பெண்கள் தாமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்,''என்றார். தொடர்ந்து, வக்கீல்கள் கலைமணி, ரங்கீலா, சமூக நலத்துறை பாலியல் நிபுணர் குமார் ஆகியோரும் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி