உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும் துாய்மை பணியாளர்களுக்கு அறிவுரை

குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும் துாய்மை பணியாளர்களுக்கு அறிவுரை

பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சி சார்பில், துாய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார பிரிவு பணியாளர் தினேஷ்குமார் வரவேற்றார். களப்பணியாளர் மலர் பேசுகையில், ‘‘குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணியில் நகராட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள துாய்மை பணியாளர்கள் குப்பைகளை, வாங்கும் போது அல்லது அகற்றும் போது ‘மட்கும் குப்பை, மட்காத குப்பை, கண்ணாடிகள்,’ என, தனித்தனியாக பிரித்து எடுக்க வேண்டும். பிரித்து எடுக்கும் குப்பைகளை, வாகனங்களில் ஏற்றும்போதும் அதேபோல் ஏற்றி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வழங்க வேண்டும். டெங்கு பணியாளர்கள் மக்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். நிகழ்ச்சியில், நகராட்சி துாய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், டெங்கு விழிப்புணர்வு பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை