தேவாலா அரசு பள்ளியில் மரக்கன்று நடவு நிகழ்ச்சி
பந்தலுார் ; தேசிய பழங்குடியினர் தினத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.மாநிலம் முழுவதும், 22 ஆம் தேதி வரை தேசிய பழங்குடியினர் தினம் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான நேற்று அனைத்து அரசு பழங்குடியினர் பள்ளிகளிலும், மரக்கன்றுகள் நடவு செய்ய அரசு அறிவுறுத்தி இருந்தது. தொடர்ந்து, பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் முருகன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்தார். தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமூர்த்தி, வர்கீஸ், மனநல ஆலோசகர் சத்தியசீலன் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகளை வழங்கினர். தொடர்ந்து, பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. ஆசிரியர் தவமுரளி நன்றி கூறினார்.இதேபோல, பொன்னானி அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் சேகர் தலைமையில் மரக்கன்று நடப்பட்டது.