மேலும் செய்திகள்
பாடநுால் வழங்கல்
10-Oct-2024
கோத்தகிரி: கோத்தகிரி குறுவள மையம் ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த கலை திருவிழாவில், பள்ளி சிறுவர்களின் கலை நிகழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்தது.பள்ளி மேலாண்மை குழு மாணவர் உறுப்பினர் ராமா கவுடர் தலைமை வகித்தார். கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள, ஆறு பள்ளிகளை சேர்ந்த, 80 மாணவர்கள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும், பேச்சு, பாட்டு, ஓவியம் மற்றும் மாறுவேட போட்டிகளில் மாணவர்கள் அசத்தினர்.சக்கத்த அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதா; குண்டாடா நடுநிலைப்பள்ளி ஆசிரியை ரோஸ்லின் ஜெப செல்வி மற்றும் அரவேனு ஜி.டி.ஆர்., பள்ளி ஆசிரியர் ஜெனிஸ் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். கவுன்சிலர் சகுந்தலா காளிதாஸ் மற்றும் தேவகி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், ஆசிரியர்கள் தினகரன், சிவகுமார் மற்றும் ஹேரி உத்தம் சிங் ஆகியோர் கலை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
10-Oct-2024