உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மேல்நிலைப்பள்ளி பவள விழா: பங்கேற்ற முன்னாள் மாணவர்கள்

மேல்நிலைப்பள்ளி பவள விழா: பங்கேற்ற முன்னாள் மாணவர்கள்

பந்தலுார்: பந்தலுார் அருகே பள்ளியின் பவள விழா நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.பந்தலுார் அருகே உப்பட்டி பாரத மாதா மேல்நிலை பள்ளியின், 75-ம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள் தங்கள் பெயர்கள் மற்றும் படித்த வருடங்களை பதிவு செய்த பின்னர், தங்கள் நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தனர். அதனையடுத்து நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாணவியான, ராதாலட்சுமி, 80, கவுரவிக்கப்பட்டார். பள்ளி முதல்வர் பிஜூ வரவேற்றார். தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் நிகழ்ச்சி குறித்து பேசினார். முன்னாள் மாணவர்களால் ஏற்படும் சமூக பணிகள் குறித்து பள்ளியின் முதன்மை அலுவலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மத்தாய் விளக்கினார்.தொடர்ந்து, தாளாளர் பாதர் ஜார்ஜ், பவள விழா குழு தலைவர் சிஜி மேத்யூ, துணை தலைவர் ரெஜி, பாதர் மேத்தியூ, வக்கீல் கணேசன், பாதர் லுாக்கோஸ், டாக்டர்கள் உண்ணிகிருஷ்ணன் , அன்வர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கீவர்கீஸ் உள்ளிட்டோர், 'மலரும் நினைவுகள்' குறித்து பேசினர்.ஆயிரக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற 'போட்டோ' எடுத்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் எல்டோ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ