சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்; துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு
ஊட்டி; ஊட்டி கூட்ெஷட் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சியில் உள்ள, 36 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சீரமைத்தாலும் பலன் இல்லை. தற்போது, ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து, கூட்ஷெட் செல்லும் சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதியடைந்துள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.