உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அங்கன்வாடி முன் தேங்கியுள்ள கழிவுநீர்; குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம்

அங்கன்வாடி முன் தேங்கியுள்ள கழிவுநீர்; குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம்

ஊட்டி : ஊட்டி லோயர் பஜார் சாலையில் உள்ள அங்கன்வாடி மையம் எதிரே, பல மாதங்களாக தேங்கியுள்ள கழிவுநீரால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி லோயர் பஜார் சாலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பல குழந்தைகள் படிக்கின்றனர். பிரதான சாலை என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இது அருகே பயணிகள் அமரும் வகையில் நிழல் குடையும் உள்ளது. இந்நிலையில், அங்கன் வாடி மையம் எதிரே கால்வாயில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை அங்கன் வாடி மையத்திற்கு அழைத்து வரும் பெற்றோர், கழிவுநீர் தேங்கி இருப்பது குறித்து நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தனர். அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் நகராட்சியில் புகார் தெரிவித்துள்ளனர். இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, நோய் வரும் முன்பு இப்பகுதியை துாய்மை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி