உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை

ஊட்டி; ஊட்டி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த விஜய்,25, என்பவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். வீட்டுக்கு வந்தவுடன் சிறுமி சோர்வாக இருப்பதை கண்ட அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளார். சிறுமி நடந்ததை கூறியதை அடுத்து, ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போலீசார், 2020ம் ஆண்டு பிப்., 5ம் தேதி விஜயனை கைது செய்தனர். வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், விஜயனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட் டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ