புதர் சூழ்ந்த நிழற்குடை
பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு சந்தக்குன்னு சாலை சந்திப்பு பகுதியில், பயணிகள் நிழற்குடை புதர்கள் சூழ்ந்தது பந்தலூர் அருகே பிதர்காடு சந்தக்குன்னு கிராமத்திற்கு செல்லும் சாலை சந்திப்பு பகுதி மற்றும் வனச்சரக அலுவலகம் எதிரே சாலையோரம் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் யானைகள் வந்து செல்லும் வழித்தடம் அமைந்துள்ள நிலையில், நிழற்குடை அருகே புதர்கள் சூழ்ந்துள்ளதால், யானை போன்ற வனவிலங்குகள் வருவது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிழற்குடையும் பாழடைந்து, சேறு நிறைந்துள்ளதால் பயணிகள் உள்ளே அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நிழற்குடை அருகே உள்ள புதர்களை அகற்றி, சீரமைக்க வேண்டும். என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.