நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்
நீலகிரியில், இ - பாஸ் ரத்து உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கம் சார்பில், முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால், சுற்றுலா தலங்களில் பயணியர் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணியர், உணவகங்கள் இல்லாததால், அவதி அடைந்து அம்மா உணவகங்கள், உள்ளூரில் உள்ள போலீஸ் உணவகங்களை தேடிச்சென்று உணவு உட்கொண்டனர்.