உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விலை உயராத ஊட்டி பூண்டு சிறு விவசாயிகள் கவலை

விலை உயராத ஊட்டி பூண்டு சிறு விவசாயிகள் கவலை

குன்னுார்: ஊட்டி பூண்டுக்கு இரு மாதங்களாகியும் விலை உயர்வு ஏற்படாமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், கேரட், உருளைகிழங்கு, ஊட்டி பூண்டு அதிகளவில் பயிரிடப்படுகிறது.ஊட்டி பூண்டு, காரத்தன்மை காரணமாக தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.கொரோனா பாதிப்புக்கு பிறகு, ஊட்டி பூண்டு விலை அதிகரித்தது. இதனால். பூண்டு சாகுபடி பரப்பளவும் அதிகரித்தது. கடந்த ஆண்டு இறுதியில், ஒரு கிலோ பூண்டு, 600 ரூபாய் முதல் சில ரகம், 1000 ரூபாய் எனவும் விற்பனையானது.கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, தொடர்ந்து விலை சரிவு ஏற்பட்டது. 60 ரூபாய் முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை ஏலம் போனது. சில நாட்களாக, மேட்டுப்பாளையம் மண்டியில் நடந்த ஏலங்களில் சாதாரண ரகம், 45 ரூபாய் முதல் சிறந்த ரகம் 80 ரூபாய் எனவும் விற்பனையாகி உள்ளது. இரு மாதங்களாகியும் தொடர்ந்தது விலை வீழ்ச்சி நீடிப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'இலங்கையில் இருந்து சைனா பூண்டு புழக்கத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், நீலகிரியில் விளைச்சல் அதிகரித்ததாலும், பூண்டு விலை வீழ்ச்சிடைந்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ