உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளியில் எஸ்.எம்.சி., கூட்டம்

அரசு பள்ளியில் எஸ்.எம்.சி., கூட்டம்

கோத்தகிரி: கோத்தகிரி-- தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. பட்டதாரி ஆசிரியர் பீமன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுசல்யா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பிரகாஷ், முதுகலை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 'திறன் இயக்கம், எண்ணும் எழுத்தும், உயர் கல்வி வழிகாட்டி குறித்தும், சிறப்பு தேவைகள் உடைய குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன்,' குறித்து விளக்கப்பட்டது. மேலும், பள்ளியில் நடைமுறையில் உள்ள, மகிழ் முற்றம், மன்ற செயல்பாடுகள், மணற் கேணி செயலி துாதுவர்கள், போக்குவரத்து - பாதுகாவலர் வசதி, இல்லம் தேடி கல்வி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, மாணவர்களின் தேர்ச்சி, ஒழுக்கம் மற்றும் பள்ளியை மேம்படுத்த முக்கியத்துவம் வழங்குவது என, முடிவு எடுக்கப்பட்டது. இதில், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் பலர் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியை திவ்யபிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி