உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புகையில்லாத போகி பண்டிகை விழிப்புணர்வு ஊர்வலம்

புகையில்லாத போகி பண்டிகை விழிப்புணர்வு ஊர்வலம்

கூடலுார்; கூடலுாரில் காற்று மாசுபடுவதை தடுக்க புகையில்லாத போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கூடலுார் நகராட்சி அலுவலகம் அருகே, சேவாலய அறக்கட்டளை சார்பில், காற்று மாசு படுவதை தடுக்க புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜார்ஜ் துவக்கி வைத்தார்.ஊர்வலத்தில், காற்று மாசு படுவதை தடுக்க புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலம் புதிய பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில், டாக்டர் திலக் லால், தொழில் பயிற்சி மையத்தின் மாணவர்கள், அறக்கட்டளை ஊழியர்கள் பங்கேற்றனர். பாரதியார் சமுதாய கல்லுாரி தையல் பயிற்சி பயிற்றுனர் சுமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை