உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பேரக்ஸ் ஸ்டுடியோவில் புகுந்த பாம்பு மீட்பு

 பேரக்ஸ் ஸ்டுடியோவில் புகுந்த பாம்பு மீட்பு

குன்னுார்: குன்னுார் பேரக்ஸ் ராணுவ பகுதியில் உள்ள ஸ்டுடியோவில் புகுந்த சாரை பாம்பை குன்னுார் தீயணைப்பு துறையினர் பிடித்தனர். நீலகிரி மாவட்டம், குன்னுார் ராணுவ பகுதியில் பேரக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ஸ்டுடியோவில் பாம்பு புகுந்ததாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கதவு அருகே வெளிப்பகுதியில் இருந்து, 4 அடி நீளமுள்ள சாரை பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை