மேலும் செய்திகள்
பிரைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை
19-Nov-2025
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், நடந்த தென் மாநில அளவிலான நெடுந்துார ஓட்ட பந்தயத்தில், 11வது காலாட்படை பிரிவு வெற்றி கோப்பையை தட்டி சென்றது. குன்னுார் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், தென் மாநில அளவிலான, 10 கி.மீ., ஓட்டப்பந்தயம் நடந்தது. போட்டியில், 11, 36, 54வது காலாட்படை பிரிவுகள், 12 கார்ப்ஸ், 41 பீரங்கி படை, 12 ரேப்பிட், 31 ஆர்ம்ட், 21 கார்ப்ஸ் அணிகள் பங்கேற்றன. அதில், 32:02 நிமிடங்களில், 54வது காலாட்படை பிரிவு ஹவில்தார் ஜித்தேந்தர் குமார் (2வது மெட்ராஸ்); 32:10 நிமிடங்களில், 2வது காலாட்படை பிரிவு ஹவில்தார் பிரமோட் சிங் ( 12வது கூர்க் ரைபில்); 32:14 நிமிடங்களில், 12வது ரேப்பிட் பிரிவு ஹவில்தார் கவுரவ் முத்துார் (15 ஜி.டி.ஆர்.,) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, 11 இன்பேன்ட்ரி டிவிஷன் வென்றது. போட்டியை மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் துணை கமாண்டன்ட் கர்னல் நித்தின் குட்டப்பா துவக்கி வைத்தார். போட்டி முடிந்தவுடன், வென்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பை வழங்கினார்.
19-Nov-2025