உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் போலீஸ் வாகன பராமரிப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

ஊட்டியில் போலீஸ் வாகன பராமரிப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

ஊட்டி : நீலகிரியில், காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்.பி., ஆய்வு செய்தார்.காவல்துறையில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில், மாவட்டத்தில் காவல்துறை சார்பில் இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை, அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்யும் பணி, ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடந்தது. எஸ்.பி., நிஷா அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சிறந்த முறையில் வாகனங்களை பராமரித்து வரும் காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். பின், கபடி போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி