உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறப்பு மலை ரயில்கள் இயக்கம் ஆக., 18 வரை நீட்டிப்பு

சிறப்பு மலை ரயில்கள் இயக்கம் ஆக., 18 வரை நீட்டிப்பு

குன்னுார்; குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு மலை ரயில் இயக்கம், ஆக. 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.குன்னுார்- ஊட்டி இடையே தினமும், தலா நான்கு முறையும், மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே, தலா ஒரு முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது.இந்நிலையில், கோடை கோடை சீசனை முன்னிட்டு, கடந்த மார்ச், 28 முதல் ஜூலை, 7 வரை, வார இறுதி நாட்களில், வெள்ளி முதல் திங்கள் கிழமை வரை, சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் கட்டுவதால், இந்த சிறப்பு மலை ரயில்கள் ஆக., 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.வரும், 11ல் இருந்து, வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் ஊட்டியிலிருந்து குன்னுருக்கு மதியம், 2:50 மணிக்கும்; சனி, திங்கள் கிழமைகளில் காலை, 9:20 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.மேட்டுப்பாளையத்தில் இருந்து, வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் காலை, 9:10 மணிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சனி, திங்கள் கிழமைகளில் காலை, 11:25 மணிக்கும் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !