வீட்டை விட்டு சென்ற மாணவிகளை சென்னையில் மீட்ட தனிப்படை போலீஸ்
குன்னுார்;குன்னுாரில் காணாமல் போன பள்ளி மாணவிகள்,சென்னையில் மீட்டு அழைத்து வரப்பட்டனர். குன்னுார் டி.டி.கே., ரோடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் பயிலும் 7, 13, 14 வயதுடைய மாணவியர், 3 பேர் கடந்த, 6ம் தேதி மாலை, 3:30 மணியில் இருந்து காணாமல் போயினர். பெற்றோர், குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் பல இடங்களிலும் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தேடும் பணியில் ஈடு பட்டனர். ரயிலில் சென்னை சென்றது தெரியவந்ததால், எஸ்,ஐ., நாகேந்திரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று கண்டுபிடித்து அழைத்து வந்தனர். சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'வீட்டில் தந்தை குடிபோதையில் இருப்பதால், சென் னைக்கு ஹாஸ்டலில் தங்கி படிக்க சென்றதாகவும் கூறி யுள்ளனர். வீட்டில் சேமித்த, 700 ரூபாய் தொகையை எடுத்து, மேட்டுப்பாளையத்திற்கு அரசு பஸ்சில் சென்று, அங்கிருந்து சென்னைக்கு ரயிலில் சென்றனர்,' என, தெரியவந்தது. தொடர்ந்து, குழந்தைகள் நல அலுவலர்கள், குழந்தை கள் மற்றும் பெற்றோருக்கு 'கவுன்சிலிங்' அளித்தனர். 14 வயது மாணவி குன்னுா ரில் உள்ள விடுதியில் சேர்க் கப்பட்டார். மற்ற இரு மாணவியர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.