உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம்

நகராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம்

ஊட்டி: நீலகிரியில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம், 27ம் தேதி துவங்குகிறது. கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட, அனைத்து வார்டுகளிலும், வார்டு உறுப்பினர் தலைமையில், வரும், 27, 28, மற்றும் 29ம் தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான, குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடு கள் இருந்தால் கோரிக்கை வைக்கலாம். வார்டு பகுதி பொது மக்களால் தெரிவிக்கப்படும் பிரதான, மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, சம்மந்தப்பட்ட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்க பிரிதிநிதிகள் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும் என, கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை