உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டிக்கு முதல்வர் வருகை விழா மேடை பணி துரிதம்

ஊட்டிக்கு முதல்வர் வருகை விழா மேடை பணி துரிதம்

ஊட்டி: ஊட்டிக்கு முதல்வர் வருகையை ஒட்டி விழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஊட்டியில் உள்ள கால்ப் கிளப், பட்பயர் பகுதிகளில், 499 கோடி ரூபாயில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கல்லுாரி திறக்கப்பட்டு வகுப்பு நடந்து வருகிறது. தற்போது, மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் ஏப்., 6ம் தேதி திறந்து வைக்கிறார். அரசின் நலத்திட்ட விழா, ஊட்டி அரசு கலைக் கல்லுாரி மைதானத்தில் நடைபெறுகிறது. அங்கு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அப்பகுதியில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி