பஜாரில் முகாமிடும் தெருநாய்கள்; அச்சத்தில் நடக்கும் உள்ளூர் மக்கள்
பந்தலுார்; பந்தலுார் பஜார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திறந்த வெளியில் கொட்டப் படும் கோழி மற்றும் மீன் கழிவுகளை உட்கொள்ளும் தெருநாய்களுக்கு நோய்கள் ஏற்பட்டுள்ளது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டமாக வருவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை துரத்தி கடிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகிறது. ' தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்,' என, நகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவனல்லா பகுதியில் உள்ள விலங்குகள் மீட்பு மையம் சார்பில், தெரு நாய்கள் பிடித்து செல்லப்பட்டு குடும்ப கட்டுப் பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னர் மீண்டும் இதே பகுதியில் கொண்டு வந்து விடப்படுகிறது. இதற்கு பின்னர் நாய்களால் மக்களுக்கு எவ்வித பிரச்னை யும் இல்லாமல் இருக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.