உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண போராட்டம்

வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண போராட்டம்

கூடலுார்; கூடலுார் மூன்றாம் மைல் பகுதியில், வனத்துறையை கண்டித்து, பொதுமக்கள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. கூடலுார் ஸ்ரீமதுரை, பாடந்துதுறை, செலுக்காடி உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானைகள் இரவில் குடியிருப்புக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வனத்துறையினர் இரவில் கண்காணித்து விரட்டினாலும், யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், பாடந்துறை, சர்கார்மூலா பகுதிகளில், 20 மாடுகளை தாக்கி கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வனத்துறையை கண்டித்து தேவர்சோலை பேரூராட்சி, 13ம் வார்டுக்கு உட்பட்ட கிராம மக்கள் சார்பில், 3வது மைல் பகுதியில், நேற்று கவன ஈர்ப்பு போரட்டம் நடந்தது. அதில், கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் பங்கேற்றார். போராட்டத்தில், வனத்துறையை கண்டித்தும், காட்டு யானைகள், புலி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க அகழி, சோலார் மின்வேலி அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை