உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளியில் துப்பாக்கி சூடு வழக்கு சிறார் இல்லத்தில் மாணவர்

பள்ளியில் துப்பாக்கி சூடு வழக்கு சிறார் இல்லத்தில் மாணவர்

பாலக்காடு: பாலக்காடு அருகே, அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன் சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பள்ளிப்புறம் பருத்தூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், கடந்த 24ம் தேதி 9ம் வகுப்பு அறையில், மாணவர் ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்து நாட்டு துப்பாக்கி வெடித்தது. இதில், சக மாணவரின் தோள்பட்டையில் துப்பாக்கி தோட்ட பாய்ந்து படுகாயமடைந்தார். தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்கு சென்று நடத்திய முதல் கட்ட விசாரணையில் மாணவன் கொண்டு வந்தது உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாணவரை, வரும், டிச., 5ம் தேதி வரை கோழிக்கோடு வெள்ளிமாடுகுன்னு சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டார். அந்த துப்பாக்கி, மாணவனின் தாத்தாவுக்கு சொந்தமானது எனவும், வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை