உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகளிர் மாநில போட்டிக்கு மாணவியர் அணி தேர்வு

மகளிர் மாநில போட்டிக்கு மாணவியர் அணி தேர்வு

குன்னுார்; நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற, குன்னுார் சாந்தி விஜய் மகளிர் பள்ளி அணியினர், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான, பள்ளி மாணவியருக்கான ஹாக்கி போட்டிகள் நடந்தது. இதில், டெம்ஸ் பள்ளி, சாம்ராஜ், அறிஞர் அண்ணா அரசு பள்ளி, எல்லநள்ளி, எடப்பள்ளி உட்பட பல்வேறு அரசு பள்ளி அணிகள் பங்கேற்றன. அதில், இறுதி போட்டியில், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாந்தி விஜய் மகளிர் பள்ளி அணி 6-0 என்ற கோல் கணக்கில் சாம்ராஜ் பள்ளியை தோற்கடித்தது. 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், 3-1 என்ற கோல் கணக்கில், சாந்தி விஜய் பள்ளி, சாம்ராஜ் பள்ளியை வென்று, சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டி சென்றது. இந்த அணியினர் விரைவில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பள்ளி தாளாளர் லட்சுமி சந்த், உடற்கல்வி ஆசிரியர் உஷாராணி மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை