உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சூசைட் பாயின்ட்டில் நின்று நண்பனுக்கு போட்டோ அனுப்பிய மாணவர் மாயம்

சூசைட் பாயின்ட்டில் நின்று நண்பனுக்கு போட்டோ அனுப்பிய மாணவர் மாயம்

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுாரை சேர்ந்த அபுமுகமது என்பவரின், 19 வயது மகன், தனியார் ஓட்டலில் பணியாற்றியதுடன், பிராவிடன்ஸ் கல்லுாரி வாயிலாக, அஞ்சல் வழியில் பி.எஸ்.சி., டேட்டா சயின்ஸ், 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கோவையில் உள்ள அவரது நண்பருக்கு, குன்னுார் அருகே, 'சூசைட் பாயின்ட்' பாறையில் நின்றவாறு, மொபைல் போனில் போட்டோ எடுத்து அனுப்பி, 'வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்து கொள்கிறேன்,' என, குறுந்தகவல் அனுப்பி உள்ளார். நண்பர் உடனடியாக, மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வீட்டில் பார்த்த போது, ஏற்கனவே எழுதப்பட்ட தற்கொலை குறித்த கடிதமும் காணப்பட்டது. பெற்றோர் அப்பர் குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். டைகர்ஹில் பகுதியின் அருகே உள்ள 'சூசைட் பாயின்ட்' பாறை பகுதிக்கு தன்னார்வலர்களுடன் சென்று பார்த்தனர். அங்கு மாணவரின் 'பேக்' மட்டும் கிடைத்தது. அப்பகுதி ஆயிரம் அடி பள்ளம் என்பதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாலும், இருளில் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. போலீசார் கூறுகையில்,'வனத்துறை, தீயணைப்பு துறையினருடன் நாளை காலை தேடும் பணி நடக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி