உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எருமைகள் முட்டியதில் மாணவர்கள் காயம்

எருமைகள் முட்டியதில் மாணவர்கள் காயம்

பந்தலுார்: பந்தலுார் பஜாரில் எருமைகள் முட்டியதில் இருவர் காயமடைந்தார். பந்தலுார் பஜார் பகுதியில், நேற்று மாலை பள்ளி விட்டு மாணவர்கள் வந்தபோது பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்த எருமைகள், திடீரென ஆக்ரோஷத்துடன் ஓடின. அதில், பள்ளி மாணவி, கல்லுாரி மாணவர் முகம்மது உபைத்,24, ஆகியோர் காயமடைந்து, பந்தலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது, அங்கு இருந்த மக்கள் மற்றும் மாணவர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியதுடன், இப்பிரச்னைக்கு தீர்வு காண, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,‘கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பொதுவெளியில் விட்டால், சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை