உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழுதடைந்து நின்ற பஸ்: பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பழுதடைந்து நின்ற பஸ்: பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், பழுதடைந்து நின்ற பஸ்சால் பயணிகள் மற்றும் மாணவர்கள் சிரமப்பட்டனர். கூடலுார் இருந்து இன்று (நவ.,5) காலை தாளூர் பகுதிக்கு, அரசு பஸ் இயக்கப்பட்டது. காலை நேரம் என்பதால், கேரளா மாநிலம் செல்லும் பயணிகள், உள்ளூர் பகுதிக்கு வேலைக்கு செல்லும் மக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இந்நிலையில், பஸ் தேவாலா -பந்தலுார் சாலையில் டயர் பழுதடைந்து நின்றது. தொடர்ந்து, பயணிகள் இறக்கி விடப்பட்டு, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் இணைந்து டயரை மாற்றி, பயணிகளை ஏற்றி சென்றனர். காலை நேரத்தில் பஸ் பழுதடைந்து நடுவழியில் நின்றதால் பயணிகள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !